பாஜக – சீமான்
பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடன் பேசிய சீமான், தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும், அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்றும் சவால் விட்டார்.
பாஜகவை சீண்டிய சீமான்
அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் என்றார். இப்படி மாறி மாறி இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மீண்டும் பாஜகவை சீண்டியுள்ளார்.
சிலிண்டர் விலை குறைப்பு
அதாவது எரிவாயு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை மத்திய அரசு குறைத்து அறிவித்திருப்பதற்கு காரணம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ளதுதான் என்றார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதை குறி வைத்தே பாஜக சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்துள்ளதாக கூறிய சீமான், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.
ரொம்ப படித்தால் பைத்தியம் ஆகி விடுவீர்கள் – சீமான்
மது கூடங்களை திறக்கிறார்கள்
திமுகவையும் சாடிய சீமான், தமிழகத்தில் 1500 அரசு பள்ளிக்கூடங்கள் மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். பள்ளிக்கூடங்களை கட்ட அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு கலைஞரின் பெயர் வைக்கப்படுவதாகவும் சாடினார். மேலும் காமராஜர் கல்விக்கூடங்களை திறந்து வைத்தார் என்றும் திமுகவினர் மது கூடங்களை திறந்து வைக்கின்றனர் என்றும் சீமான் விளாசினார்.
யாருடன் கூட்டணி?
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உணவு பொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்ற சீமான் தங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்து தங்கள் ஆட்சியில் வாழ்ந்து பார்க்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே தேர்தலை எதிர்க்கொள்ளும் என்றும் சீமான் தெரிவித்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.