நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2023 செப்டம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் இப்பன்தீவு (புத்தளம் மாவட்டம்), அனுராதபுரம், கடுகெலியாவ மற்றும் இலுக்வௌ (அனுராதபுர மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.