பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் சுகன்யா
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபகாலமாக அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சுகன்யா, தற்போது டிஎன்ஏ என்ற ஒரு மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் சூழலுக்கான ஒரு பாடலை எழுதி, பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சரத் என்பவர் இசையமைத்துள்ளார்.
இது குறித்து சுகன்யா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், டிஎன்ஏ என்ற மலையாள படத்தில் நான் எழுதி உள்ள தமிழ் பாடல் விரைவில் வெளி வர உள்ளது. ரொம்ப அருமையான பாடல். இந்த படமும் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன். இந்த பாடலை கேட்டதும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இந்த பாடல் எழுத வாய்ப்பு அளித்த இயக்குனர், இசையமைப்பாளருக்கு மிக்க நன்றி என தெரிவித்திருக்கிறார்.