மூணாறு:மூணாறு அருகே சூரியநல்லி பாப்பாத்திசோலை பகுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய சம்பவத்தில் தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தைச் சேர்ந்த புரோஸ் கான் 36, முகம்மதுமுனீர் 36, ஷெமீர்பாபு 35, ஹாசிம் 36, கொச்சுமோன் 38, சஜீர் 33 பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நிலையில் காயங்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரை கடத்தினர்.
அதன்பிறகு மூணாறுக்கு தப்பி வந்தவர்களை தேடி காயங்குளம், கரியிலகுளங்கரா போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் பின் தொடர்ந்து வந்தனர்.
மூணாறு அருகே சூரிய நல்லி பாப்பாத்திசோலை பகுதிக்கு சென்றவர்களை பின் தொடர்ந்த போலீசாரை ஆக.28 அதிகாலை தாக்கினர். அப்போது கரியிலகுளங்கரா ஸ்டேஷனைச் சேர்ந்த போலீஸ்காரர் தீபக் 37, கழுத்து, வயிறு உள்பட பல இடங்களில் கத்தி குத்து விழுந்து பலத்த காயமடைந்தார். கொச்சுமோன், சஜீர் ஆகியோர் தப்பி விட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேரை போலீசார் கைது செய்து பீர்மேடு சப் ஜெயிலில் அடைத்தனர்.
சாந்தாம்பாறை போலீசார் தலைமறைவான இருவரை தேடிவந்தனர். கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் பதுங்கி இருந்த கொச்சுமோன், சஜீரை இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement