உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் பா.ஜ.க-வை மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் இளைஞர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் விசாரணையில், வினய் ஸ்ரீவஸ்தவா (Vinay Srivastava) என்றறியப்படும் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த இளைஞர், அமைச்சரின் மகனான விகாஸ் கிஷோரின் நண்பர் எனத் தெரியவந்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் முக்கியமாக, சம்பவம் நடந்த வீட்டில், அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் பெயரில் பதிவுசெய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். அதோடு, சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைதும்செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், “சம்பவம் நடந்தபோது என் மகன் விகாஸ் கிஷோர் வீட்டில் இல்லை. வினய் ஸ்ரீவஸ்தவா என் மகனுக்கு ஒரு நல்ல நண்பர். இதுபற்றி செய்தியறிந்ததும் என் மகன் மிகவும் வருத்தமடைந்தார். பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த சமயத்தில், நண்பர்கள் உட்பட அங்கிருந்த நபர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். தற்போது போலீஸார் இதில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள். அதோடு, போலீஸார் கைப்பற்றிய கைத்துப்பாக்கி என் மகனுடையது தான்” என்று கூறினார்.
மேலும், வினய் ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி , “மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் எனது சகோதரர் வினய் ஸ்ரீவஸ்தவா கொல்லப்பட்டார். என் சகோதரர், அவரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பர். சம்பவம் நடந்தபோது 3 பேர் அங்கிருந்தனர். ஆனால் விகாஸ் கிஷோர் எங்கிருந்தார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதேசமயம், விகாஸ் கிஷோரின் பெயரில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அந்த இடத்திலிருந்து போலீஸாரால் மீட்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY