முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடகாவில் ஹஸ்ஸன் (Hassan) மக்களவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி பதவி செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரஜ்வல் ரேவண்ணா

அதில், ஒரு மனுவை அதே தொகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜேகவுடாவும், இன்னொரு மனுவை தோல்வியுற்ற பா.ஜ.க வேட்பாளர் ஏ.மஞ்சுவும் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்துகொண்டு ஏ.மஞ்சு, தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுக்களின்மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.நடராஜன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையின் முடிவில் நீதிபதி கே.நடராஜன், பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளித்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

அதோடு, இரண்டு மனுக்களிலும் ஏ.மஞ்சுவை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதைக் கவனித்த நீதிபதி கே.நடராஜன், ஏ.மஞ்சு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றம்

மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.