சென்னை: மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்.
மோட்டோ ஜி84 சிறப்பு அம்சங்கள்
- 6.55 இன்ச் ஃபுள் ஹெச்டி+ pOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி நெட்வொர்க் இணைப்பு
- ட்யூயல் நானோ சிம் சப்போர்ட்
- மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை ரூ.19,999. வரும் 8-ம் தேதி முதல் விற்பனைக்கு தொடங்குகிறது
- விலையில் அறிமுக சலுகையும் குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
#motog84_5G is here to add colour to your world & get #AllEyesOnYou. Indulge in opulence of most Stunning 5G Phone with Pantone® Colour of 2023- Viva Magenta & Marshmallow Blue at ₹18,999*. Sale starts 8th Sept. on @flipkart, https://t.co/azcEfy2uaW & at leading retail stores
— Motorola India (@motorolaindia) September 1, 2023