வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது . 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அனைத்து வங்கி கிளைகளில், மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். திரும்ப பெறுவதற்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், ரிசவர் வங்கி இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகள் 93 சதவீதம் வரை திரும்ப பெற பட்டு உள்ளது. அதில் 76 சதவீதம் வைப்புத்தொகையாகவும், 13 சதவீதம் மாற்று மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement