சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.