
விஜய் 68வது படத்தில் இணையும் சிம்ரன்
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். இந்த படத்தில் தந்தை – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஜோதிகாவிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. அதனால் தற்போது அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏற்கனவே விஜய் – சிம்ரன் ஜோடி ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.