வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு இசுசூ D-Max S-Cab Z பிக்கப் டிரக் மாடல் ரூ.15 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 78 BHP வழங்குகின்ற 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இசுசூ நிறுவனம் பிக்கப் டிரக் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வரும் நிலையில் கூடுதலாக இரண்டு கேபின் பெற்ற டி-மேக்ஸ் எஸ்-கேப் இசட் மாடல் வந்துள்ளது.
Isuzu D-Max S-Cab Z
கமர்ஷியல் பயன்பாடிற்கு ஏற்ற மாடலில் குரோம் கிரில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்க உடன் எல்இடி ரன்னிங் விளக்கு, பனி விளக்கு, கூரை தண்டவாளங்கள், கன் மெட்டல் ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய 6 ஸ்போக் வீல் கவர், க்ரோம் ஃபினிஷ்ட் ORVM ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் வருகிறது.
டி-மேக்ஸ் எஸ்-கேப் இசட் பிக்கப் டிரக்கில் நீலம், கருப்பு, சாம்பல், வெள்ளி மற்றும் வெள்ளை ஆகிய 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய இசுசூ D-Max S-Cab Z பிக்கப் டிரக் இரட்டை முன் ஏர்பேக்குகள், பின்புற இருக்கைகளுக்கு ISOFIX, வேகத்தை உணர்ந்து கதவு பூட்டும் வசதி, பிரேக் ஓவர்ரைடு சிஸ்டம், சீட் பெல்ட் எச்சரிக்கை போன்றவற்றுடன் வருகிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் வருகிறது.
78 BHP மற்றும் 176 Nm டார்க்கை வழங்குகின்ற 2.5-லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாட்டில் 4×4 விருப்பம் இல்லை.