Royal Enfield Bullet 350 price – ₹1.74 லட்சத்தில் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வெளியானது

உலகின் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான விற்பனைக்கு ரூ.1.74 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

90 ஆண்டுகளாக சந்தையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற புல்லட் பைக் புதிய J-சீரிஸ் என்ஜின் பெற்றதாக வந்துள்ளது. முன்பாக இடம்பெற்றிருந்த UCE என்ஜினுக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளது.

Royal Enfield Bullet 350

புதிய J-சீரிஸ் என்ஜினை பெறுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டு புல்லட், 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும்.

குறைந்த விலை மாடலில் ரியர் டிரம் பிரேக்பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டேங்க் வேறு நிறத்தில் மற்ற பாகங்கள் கருப்பு, என்ஜின் க்ரோம் ஆக இருக்கும்.

முந்தைய மாடலை விட புதிய புல்லட் 350 மாடலில் அகலமான டயர்களை பொருத்தப்பட்டு முன்புறத்தில் 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.

ஒரு புதிய ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ள புல்லட் 350, வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக உள்ள நிலையில், முன்பக்கம் 300 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கை பெறுகின்றன.

கிளாசிக் 350 பைக்கை விட ரூ.20,000 விலை குறைவாகவும், ஆனால் ஹண்டர் 350 பைக்கை விட தோராயமாக ரூ.24,000 விலை அதிகமாக உள்ளது.

  • RE Bullet 350 Drum : 1,73,562 (மில்ட்டரி சிவப்பு மற்றும் மில்ட்டரி கருப்பு)
  • RE Bullet 350 STD  : 1,97,436 (மரூன் மற்றும் கருப்பு)
  • RE Bullet 350 Black Gold : 2,15,801 (பிளாக் கோல்டு)

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.