Royal Enfield Bullet 350 Variants – 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 வேரியண்ட் வாரியான வசதிகள்

புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் மிக நேர்த்தியாக நவீனத்துவத்தை பெற்றதாக ரூபாய் 1,74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் துவங்குகின்றது. துவக்கநிலை மில்ட்டரி வேரியண்ட், ஸ்டாண்டர்டு மற்றும் டாப் கோல்டு பிளாக் என மூன்று விதமாக உள்ள வேரியண்டுகளின் வசதிகள் மற்றும் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.

மூன்று விதமான வேரியண்ட்டை பெற்று பொதுவாக J-series 349cc என்ஜின் பொருத்தப்பட்டு 6100 RPM-ல் 20hp பவர் மற்றும் 4,000 RPM-ல் 27Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும்.

41 மிமீ முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர், அகலமான டயர்களாக முன்புறத்தில் 100/90 -19 மற்றும் பின்புறத்தில் 120/80 -18 உள்ளது. புல்லட் 350 மாடலின் எடை 195 கிலோ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ, இருக்கை உயரம் 805 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர் ஆகும்.

royal enfield bullet 350 bike red 1

Bullet 350 Military Red and Military Black

ரூ.1.74 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆரம்பநிலை மாடலில் மில்ட்டரி சிவப்பு, கருப்பு நிறத்தை பெற்று பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு டிரம் பிரேக் விருப்பத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.  க்ரோம் பாகங்களை பெற்ற என்ஜின், சாதாரண ஆர்இ ஸ்டிக்கரிங் லோகோ, பெட்ரோல் டேங்கில் மட்டும் சிவப்பு அல்லது கருப்பு நிறம் உள்ளது.

Bullet 350 Standard Black and Maroon

ரூ.1.97 லட்சத்தில் வந்துள்ள இந்த வேரியண்டில் ஸ்டாண்டர்டு கருப்பு, ஸ்டாண்டர்டு மரூன் என இரு நிறங்கள் கொண்டு, பிரேக்கிங் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு 270 மிமீ டிஸ்க் பிரேக் விருப்பத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.  அடுத்து, க்ரோம் நிற ரியர் வியூ மிரர், பெட்ரோல் டேங்கில் கோல்டன் பின் ஸ்டிரிப் கோடுகள், லோகோ பேட்ஜ் ஆனது உள்ளது.

royal enfield bullet 350 bike side

Bullet 350 Black Gold

டாப் வேரியண்டாக ஒற்றை பிளாக் கோல்டு நிறத்தை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் ஸ்டாண்டர்டு வேரியண்டின் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்புடன் கூடுதலாக, பெட்ரோல் டேங்கிற்கு மேட் மற்றும் பளபளப்பான கருப்பு நிறம், காப்பர் பின் ஸ்ட்ரிப்பிங் மற்றும் கருப்பு நிறத்தை என்ஜின் கேஸ், பின்புற பார்வை கண்ணாடிகள், எக்ஸ்ஹாஸ்ட், ஸ்போக் வீல் என அனைத்தும் பெற்று ரூ.2.16  லட்சத்தில் வந்துள்ளது.

royal enfield bullet 350

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.