வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பல்லேகெலே: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நான்கு ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒருநாள் போட்டியில் இன்று மோதவுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று இலங்கையின் பல்லேகெலேயில் நடக்கும் முக்கிய மோதலில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒருநாள் அரங்கில் கடைசியாக 2019 உலக கோப்பை தொடரில் இவ்விரு அணிகள் மோதின. தற்போது நான்கு ஆண்டுக்குப் பின் மீண்டும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்திய அணி விவரம்
ரோகித்சர்மா(கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவிந்தி ரஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement