வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை கனட அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே, ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் கனடாவும் கடந்த 2010 முதல் பேச்சுவார்த்தையை துவக்கின. ஆனால், இடையில் தடைப்பட்ட இந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு மீண்டும் துவங்கியது. ஜ20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னும் சில நாட்களில் டில்லி வர உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது: இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் மேற்க்கொள்ளும் வகையில் வேகமாக நடந்து வந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என கனடா தரப்பு ஆலோசனை தெரிவித்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த காலத்தில் அனைத்து தரப்பிடமும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், வர்த்தக பேச்சுவார்த்தை என்பது நீண்டது. பல சிக்கல்கள் நிறைந்தது. தற்போதுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக பேச்சுவார்த்தையை நிறுத்தி இருக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement