இறைவன் டிரைலர் நாளை ரிலீஸாகிறது
என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இதன் டிரைலர் வருகின்ற செப்டம்பர் 3ம் தேதி அன்று வெளியாகும் என வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.