ரஷ்யாவின் தனியார் ராணுவ படையான வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின். உக்ரைன் மீதான போரில் வாக்னர் படை ரஷ்யாவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ரஷ்ய அரசுக்கும் வாக்னர் படை தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ரஷ்ய அரசு வாக்னர் படை தலைவர் பிரிகோஸின் மற்றும் அவரது குழுவினர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிகோஸின் தனது படையுடன் ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தலைநகர் மாஸ்கோவின் பல்வேறு பகுதிகளை வாக்னர் படையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.
‘வெடிச்சு சிதறிடுவேன்’ விஜயலட்சுமி விவகாரத்தால் ஆவேசம்… வீடியோ வெளியிட்டு வெகுண்ட சீமான்!
இதனால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்னர் படையினர் மற்றும் அதன் தலைவர் பிரிகோஸின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் தெரிவித்தது ரஷ்யா. இதனை தொடர்ந்து பிரிகோஸின் பெலாரஸ் நாட்டிற்கு சென்றார்.
அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா… மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதின்!
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி வாக்னர் படை தலைவர் பிரிகோஸின் விமான விபத்தல் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. பிரிகோஸின் சென்ற சிறிய ரக விமானத்தில் சென்ற 10 பேரும் உயிரிழந்ததாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து பிரிகோஸின் படத்தை வைத்து பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரமிக்க வைக்கும் தமிழர்கள்… உலக நாடுகளை ஆட்சி செய்யும் இந்திய வம்சாவழியினர்!
பிரிகோஸின் மரணத்திற்கு ரஷ்யாவின் சதியே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக பிரிகோஸின் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தான் தற்போது ஆப்பிரிக்காவில் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும், இன்னும் உயிருடன் தான் இருப்பதாகவும் பிரிகோஸின் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.