ஈரோடு: “ஒரே நாடு, ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜார்க்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரைவழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும்.
ஒரே நாடு, ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகத்தின் தழைத்து ஓங்கவும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.
தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார். இந்த கவனர் போன்று இதுவரை தமிழகத்துக்கு ஆளுநர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என திமுக விரும்பினால் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர கவர்னர் மீது குறை சொல்லக் கூடாது. தமிழக அரசு எந்த மசோதாவை வேண்டுமானாலும் அனுப்பினால் கவனர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாதனத்திற்கு உட்பட தான் இருந்தால் மட்டுமே கவர்னர் ஒப்புதல் தருவார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவுக்கு ஆதரவும் உள்ளது. மேலும், நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்” என்றார்.