குடியாத்தம் தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். தினமும் ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து மனைவி பரானாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார். […]