சினிமா படங்களை விட குறைந்த பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்ட ஆதித்யா – எல்1 விண்கலம்

Aditya L1 Budget: இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய பிறகு தற்போது இஸ்ரோ சூரியனை நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது. சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இஸ்ரோ நிறுவனம் ஆதித்யா – எல்1 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. ஆதித்யா எல் 1 மிஷனை இஸ்ரோ தொடங்கிய நாள் முதல் நாட்டு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்ணில் பாய்வதை நேரில் காண மக்கள் குவிந்துள்ளனர். சரியாக இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மதியம் 12:10 மணிக்கு துவங்கியது.

குறைந்த செலவில் விண்வெளி விண்கலம் வடிவமைத்தில் இந்தியா புகழ்பெற்றது என்பது முக்கியமானது, மற்ற உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஹாலிவுட் விண்வெளி படங்களின் பட்ஜெட்டை விட குறைந்த செலவில் விண்கலத்தை தயார் செய்வதில் வல்லவர்கள். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவற்றை குறித்து பார்ப்போம்.

2008 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏவப்பட்ட சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பி‌ல் இருக்கும் இரசாயன மற்றும் கனிம கலவை குறித்து ஆய்வு செய்ய ஏவப்பட்டது. அதன் செலவு ரூ. 386 கோடி ஆகும். அதற்கு அடுத்து நிலவை நோக்கி இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது சந்திரயான்-2 மற்றும் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3. இதில் சந்திரயான்-2 விண்ணில் செலுத்த மொத்த பட்ஜெட் ரூ. 978 கோடி ஆகும். அதேபோல சந்திரயான்-3-க்கான செலவு 600 கோடி ஆகும்.

 

PSLV-C57/Aditya-L1 Mission:
The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs.

The launch can be watched LIVE
on ISRO Website https://t.co/osrHMk7MZL
Facebook https://t.co/zugXQAYy1y
YouTube…

— ISRO (@isro) September 1, 2023

இன்று விண்ணில் பாயும் ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செலவும் குறைந்த பட்ஜெட்டில் தான் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுவரை இஸ்ரோ தரப்பில் இருந்து செலவு குறித்து அதிகார்ப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், சுமார் ரூ. 400 கோடி வரை இருக்கும் எனத் தகவல். இவ்வளவு குறைந்த செலவில் சூரியனை பற்றி ஆய்வு செய்ய விண்ணில் விண்கலத்தை செலுத்தும் நாடு இந்தியா தான். ஏனென்றால் இதுவரை சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட விண்கலத்திற்கான செலவு அதிகமாகும். உதாரணமாக, சூரியனில் இருந்து வெளிப்படும் சூரிய புயல்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாமத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அக்டோபர் 25, 2006 அன்று ஏவப்பட்ட நாசாவின் STEREO விண்கலத்தின் செலவு 550 மில்லியன் டாலர் ஆகும்.

மறுபுறம், சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் வடிவமைக்க சுமார் $1.5 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ.1,11,43,50,00,000 ஆகும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.