புதுடில்லி:வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சீன கண்ணாடிகளின் இறக்குமதிக்கு, 5 ஆண்டுகளுக்கு அதிக பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வர்த்தக துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சீன கண்ணாடிகள், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு தொழில்துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வில், 1.8 மி.மீ., முதல் 8 மி.மீ., வரையிலான தடிமன் கொண்ட கண்ணாடிகளை சீனா அதிகளவில் நமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில், சீன கண்ணாடிகள் இறக்குமதிக்கு, டன் ஒன்றுக்கு 20,169 ரூபாய் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வரி விதிப்பு குறித்து, நிதியமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மலிவு விலை பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்வதை தடுக்க, இந்தியா ஏற்கனவே பல பொருட்களுக்கு அதிக பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement