தர்மன் சண்முக ரத்னம் வெற்றியை கொண்டாடும் தமிழர்கள்: தமிழ்நாட்டிலிருந்தும் வாழ்த்து மழை!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தர்மன் சண்முகரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்!

உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.

தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு

அண்ணாமலை – பாஜக

உலக அரங்கில், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும். திரு. தர்மன் தலைமையிலான அரசு, தொடர்ந்து, உலக அரங்கில் சிங்கப்பூரின் பெருமையை நிலைநிறுத்துவதாகவும், இந்தியாவுக்கும், தமிழ் மக்களுக்கும், சிங்கப்பூருக்குமான நெருக்கமான உறவை மேன்மைப்படுத்துவதாகவும் அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

வேல்முருகன் – தவாக

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுவரும் அவர் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலா

சிங்கப்பூரின் நிதியமைச்சர், கல்வி அமைச்சர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் துணை பிரதமர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகளில் திறம்பட பணியாற்றி, தனது தனித்திறமையை நிரூபித்துள்ள திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தற்போது சிங்கப்பூரின் அதிபராக தேர்வாகியிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.