வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் நாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி 68 கதாநாயகி’லியோ’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68’ படத்தின் கதாநாயகி குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்லியோவை தொடர்ந்து விஜய் யாருடன் இணைய போகிறார் என்று கோலிவுட் தரப்பே பெரிதும் எதிர்பார்த்த நிலையில், திடீரென வெங்கட் பிரபுவுடன் இணைந்தார். ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலே ‘தளபதி 68’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கியது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக விஜய் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
இரட்டை வேடம்மேலும் அஜித்துக்கு ஒரு மங்காத்தாவை போல் விஜய்க்கும் ஒரு தரமான படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என தளபதி ரசிகாஸ் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். அத்துடன் ‘தளபதி 68’ படத்தில் விஜய் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோ சொன்ன ஜோதிகாஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது சினேகாவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ‘வசீகரா’ படத்தில் இணைந்து நடித்த விஜய், சினேகா மீண்டும் ‘தளபதி 68’ படத்தில் ஜோடி சேர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜாஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ‘தளபதி 68’ படக்குழுவினர் பறந்துள்ளனர். அங்கு படத்திற்கான 3D ஸ்கேனிங் மற்றும் vfx பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.