ஈரோடு சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு […]