பெங்களூரு: நிலவின் தென் பகுதியில் விக்ரம் லேண்டரில் இருந்து 100 மீ., தூரம் பிரஜ்ஞான் ரோவர் பயணித்து ஆய்வு பணிகளை செய்துள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: சந்திரயான் 3 மூலம் நிலவு குறித்த பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. பல தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலவில் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து 100 மீ., வரை தற்போது நிலவு பரப்பில் ரோவர் ஆய்வு செய்துள்ளது என்றார்.
இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், நிலவின் மேற்பகுதியில் ரோவர், 100 மீ., தூரம் ஆய்வு செய்ததுடன் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement