சாம்ராஜ் நகர் : பிரசித்தி பெற்ற, மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில், 2.38 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
சாம்ராஜ் நகர், ஹனுாரின், மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியல், 36 நாட்களுக்கு முன் எண்ணப்பட்டது.
கோடிக்கணக்கான ரூபாய், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் காணிக்கை வசூலாகியிருந்தது.
கோவில் உண்டியல், நேற்று திறக்கப்பட்டது. ஹனுாரு தனியார் பஸ் நிலையம் அருகில், வர்த்தக வளாகத்தில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில், காலை 8:00 மணிக்கு துவங்கிய உண்டியல் எண்ணிக்கை, இரவு 8:00 மணி வரை நடந்தது.
உண்டியலில், 2 கோடியே 38 லட்சத்து 43 ஆயிரத்து 177 ரூபாய் ரொக்கம் வசூலாகியிருந்தது. 63 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 3.173 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.
இம்முறை மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு, அமாவாசை, பவுர்ணமி, சுதந்திர தினம், ஷிராவண மாதத்தின் சிறப்பு பூஜைகளுக்கு, பக்தர்கள் பெருமளவில் வந்திருந்தனர். எனவே, காணிக்கை அதிகம் வசூலாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement