‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்காக ரஜினியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
கலாநிதி மாறன்’ஜெயிலர்’ படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றிக்காக பரிசுகளை வாரி வழங்கி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுக்குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘ஜெயிலர்’ படம் வேறலெவல் லாபத்தை கொடுத்துள்ளதால் நேற்று காலையிலே ரஜினியை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு காசோலை ஒன்றை கொடுத்து கார் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
ரசிகர்கள் ஆர்வம்BMW i7 மற்றும் BMW X7 காரை கொடுத்து இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க கலாநிதி மாறன் சொல்ல, ரஜினியும் BMW X7காரை செலக்ட் செய்தார். அவருக்கு சாவியை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகின. இதனையடுத்து ‘ஜெயிலர்’ பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு என்ன பரிசு கிடைக்க போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.கார் பரிசுஅதன்பின்னர் ரஜினியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை சந்தித்து காசோலை ஒன்றை வழங்கினார் கலாநிதி மாறன். அதனை தொடர்ந்து ரஜினியை போல் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் Porsche ரக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார்கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்தார் நெல்சன் திலீப்குமார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டணியில் வெளியான ‘பீஸ்ட்’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. அத்துடன் பல ட்ரோல்களிலும் சிக்கியது. இதனால் ‘ஜெயிலர்’ படம் எப்படி வரப்போகிறது என்ற பயத்தில் ரஜினி ரசிகர்கள் இருந்தனர்.
வசூல் சாதனைஆனால் ‘ஜெயிலர்’ படம் மூலம் சந்தித்த சறுக்கலை சரி செய்யும் விதமாக ஜெயிலரில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 600 கோடியை கடந்து இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்காக ரஜினி, நெல்சனுக்கு பரிசு கிடைத்துள்ள நிலையில், அனிருத்துக்கு எப்போது பரிசு கிடைக்க போகிறது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.