வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வேறொருவருடன் குடும்பம் நடத்திய மனைவியை, கணவர் மற்றும் உறவினர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பெண்கள் கமிஷனும் விளக்கம் கேட்டுள்ளது.
ராஜஸ்தானின் பிரதாப்கார்க் மாவட்டத்தின் நிகால்கோட்டா கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர் அடித்து, மானபங்கபடுத்தப்பட்டதுடன், சாலையில் நிர்வாணமாக சில ஆண்கள் இழுத்து வந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்த பிறகு, விசாரணையை துவக்கினர். அதில், பெண்ணை இழுத்து வந்தது அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என தெரியவந்தது.
மேலும், திருமணத்திற்கு பிறகு வேறொரு ஆணுடன் சென்று குடும்பம் நடத்தியதால், கோபமடைந்த கணவன் வீட்டினர், அந்த பெண்ணை தாக்கி நிர்வாணமாக அழைத்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து கணவர் உள்ளிட்டவரகளை போலீசார் கைது செய்ததுடன், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இது குறித்து தேசிய பெண்கள் கமிஷனும், விளக்கம் கேட்டு போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அளிக்கும்படி கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement