ரூ. 10,000 -க்கும் குறைவான விலையில் அசத்தலான ஸ்மார்ட் டிவி!! முந்துங்கள்

Cheapest LED TV: இந்த நவீன யுகத்தில், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் எல்இடி டிவி-கள் இருப்பதை காண்கிறோம். இவற்றில் அதிக தெளிவு இருப்பதோடு, இவை அதிக இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. பெரிய அளவிலான  எல்இடி டிவி, அதாவது சுமார் 32 இன்ச் அளவுக்கு பெரிய எல்இடி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் இந்த அளவு தொகையை நம்மால் செலவிட முடிவதில்லை. சிலருக்கு டிவி வாங்க இந்த தொகை சற்று அதிகமாக இருக்கின்றது.

ஸ்மார்ட் எல்இடி டிவிகள் சந்தையில் சமீபத்திய டிரெண்ட் ஆகும். இப்போது அவை பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட் எல்இடி டிவிகள் சிறந்த படத் தரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மெலிதான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த ஆடியோவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இதற்குக் காரணம். இந்த ஆடியோவால், வீட்டில் சினிமா அரங்கின் தரத்தில் நாம் நிகழ்ச்சிகளை டிவி -இல் காண முடிகின்றது. உங்கள் வீட்டிற்கு பட்ஜெட் வரம்பில் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவுயாக இருக்கும். 

ஸ்கைவால் 80 செமீ (32 இன்ச்) HD ரெடி LED டிவி 32SWATV உடன் A+ கிரேடு பேனல் (மெலிதான பெசல்கள்)

இது 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகும். 3.5 நட்சத்திர மதிப்பீட்டில் இந்த இணையதளத்தில் கிடைக்கும் மலிவான 32 இன்ச் LED டிவி -களில் இதுவும் ஒன்று. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை ரூ. 6,999 ஆகும். சந்தையில் கிடைக்கும் மலிவான LED டிவி இதுதான். பிரேம் இல்லாத எல்இடி டிவியாக இருந்தாலும் இதன் விலை பெரிதாக அதிகரிக்காததால்தான் அந்த நிறுவனம் இதை அமோகமாக விற்பனை செய்து வருகிறது. இதன் உண்மையான விலையைப் பற்றி நாம் பேசினால், அது ரூ 15,810 ஆகும். ஆனால் அதற்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு அதன் விலை ரூ. 6,999 ஆக குறைந்து விடுகிறது. இந்த எல்இடி டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு, வைஃபை இணைப்பு, 30 வாட் லவுட் ஸ்பீக்கர்கள் கொண்ட குவாட் கோர் ப்ராசசர் உள்ளிட்ட பல அம்சங்களை பயனர்கள் பெறலாம். 

KODAK 7XPRO சீரிஸ் 80 செமீ (32 அங்குலம்) HD ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை பிளிப்கார்ட்டில் ரூ. 10,999 என்றாலும், நல்ல செய்தி என்னவென்றால், இந்த எல்இடி டிவியை வாங்கும்போது பெரும் தள்ளுபடியை பெறலாம். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இந்த 32 அங்குலத்தை வாங்க ரூ. 9990 மட்டுமே செலுத்தினால் போதும். குறைந்த விலையில் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்குவது பயனர்களுக்கு லாபகரமான டீலாக இருக்கும். ஏனெனில் இந்த எல்இடி டிவியில் பாதிக்கு மேல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் 24 வாட் ஸ்பீக்கர்களைப் பெறுகிறார்கள். இது அடுத்த நிலை ஆடியோ தரத்தை வழங்குகிறது. இதனுடன், சிறந்த செயல்திறனுக்காக பயனர்களுக்கு கோல்ட் கோர் பிராசசரும் வழங்கப்படுகிறது.

தாம்சன் ஆல்பா 80 செமீ (32 இன்ச்) HD ரெடி LED ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 30 W ஒலி வெளியீடு & பெசல்-லெஸ் வடிவமைப்பு (32Alpha007BL)

தாம்சனின் ஆல்பா ஸ்மார்ட் எல்இடி டிவியின் உண்மையான விலை ரூ. 14999 ஆகும். எனினும், ஃபிளிப்கார்ட்டில் இருந்து வாங்கும்போது இதில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரும் தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் LED டிவியை வெறும் ரூ. 990 -க்கு வாங்க முடியும். இந்த எல்இடி டிவியின் சிறப்பு என்னவென்றால், அதன் டிஸ்பிளே அளவும், அடுத்த நிலை அனுபவமும் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் வைஃபையுடன் கூடிய ஃப்ரேம்லெஸ் டிஸ்பிளேவைப் பெறுகிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.