‘லியோ’ படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழுவினர் ரெடியாக உள்ளனர்.
‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து தற்போது லியோவில் நடித்து முடித்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் கனகராஜும், விஜய்யும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் என்பதால் ‘லியோ’ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அத்துடன் இந்தப்படத்தின் இன்னொரு ஹைலைட்டாக விஜய், லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப்படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். அந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், லோகேஷ் கனகராஜின் டச் முழுவதுமாக இந்தப்படத்தில் இல்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
அந்த குறையை போக்கும் விதமாக தான் தற்போது ‘லியோ’ படத்தினை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், முன்னதாக விஷாலை லியோவில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்தார். ஆனால் விஷாலால் இந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை.
Leo: தமிழ் சினிமாவிலே இரண்டாவது படம்: பெருசா சம்பவம் செய்யப்போகும் ‘லியோ’.!
இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் அளித்துள்ள லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் ‘லியோ’ படம் குறித்து பேசும் போது, விஜய்யின் இளைய சகோதரராக லியோவில் நடிக்க லோகேஷ் கனகராஜ் என்னை அணுகினார். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான படங்களில் நடித்தால் ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக மாறிடுவேன் என்பதால் என்னால் அந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை. ‘லியோ’ படத்திற்காக நான்கு மாதங்கள் என்னிடம் லோகேஷ் கால்ஷீட் கேட்டிருந்தார்.
அதனால் என்னால் நடிக்கவில்லை. இதனால் லோகேஷிடம் சாரி கேட்டதாகவும், அவரும் தன்னை புரிந்து கொண்டதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது அந்த கேரக்டரில் தான் அர்ஜுன் நடித்து வருகிறார். அந்த கேரக்டரை தற்போது அண்ணனாக லோகேஷ் மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். விஷாலின் இந்த பேட்டி தான் தற்போது தளபதி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ‘லியோ’ படத்தில் நடிகர் அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்துக்கு இடையில் வெளியாகும் ‘லியோ’ அப்டேட்: சம்பவம் இருக்கு..!