புதுடில்லி: ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனர் நரேஷ் கோயல் இன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 848 கோடி கடன் பெற்றார். இதில் ரூ. 538.62 கோடி பாக்கியை செலுத்தாமல் மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தலைமை அலுவகத்திற்கு அழைத்துச் சென்றனர் இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement