
விஜய் தான் முதலில் வாழ்த்து சொன்னார் – வெங்கட் பிரபு
கடந்த 2011ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 50வது படமாக வெளிவந்த திரைப்படம் 'மங்காத்தா'. த்ரிஷா, அர்ஜுன், வைபவ், ராய் லட்சுமி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னனி இசை இன்னும் ரசிகர்களின் நினைவில் உள்ளது. இப்படத்தின் திரைக்கதை, வில்லத்தனம் கலந்த ஹீரோ என ட்ரெண்ட் செட்டார் ஆக அமைந்தது.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி மங்காத்தா வெளியாகி 12ம் வருடத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு வெங்கட் பிரபு தனது சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் ” விஜய் படத்திற்காக பிஸியாக உள்ள போது அஜித் படம் குறித்து பதிவிட்டுள்ளார். இது தான் சினிமாவில் அழகு” என பதிவிட்டிருந்தார். இதற்கு வெங்கட் பிரபு “விஜய் சார் தான் முதலில் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்” என பதில் அளித்துள்ளார்.