ஷாரூக்கானுக்கு அம்மாவாக நடித்துள்ள 37 வயது நடிகை : ஐந்தாம் வகுப்பிலிருந்தே தீவிர ரசிகையும் கூட
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான் ; திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாரூக்கானின் ஆஸ்தான நாயகியான தீபிகா படுகோனே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகை ரிதி துர்கா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர் ஷாரூக்கானுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ஒருவேளை படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாரூக்கானுக்கு ஜோடியா என்பது சஸ்பென்ஸ் ஆகவே வைக்கப்பட்டுள்ளது. இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் சமீபத்தில் வரவேற்பை பெற்ற அசூர் என்கிற வெப் தொடரிலும் நடித்து பிரபலமானவர். அதேசமயம் தான் ஐந்தாவது படிக்கும் போதே ஷாரூக்கானின் தீவிர ரசிகையாக மாறிய ரித்து துர்கா, இந்த 37 வயதில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது என்றால் இது ரிதி துர்காவின் சாதனையா இல்லை ஷாரூக்கானுக்கு பெருமையா ?