ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைச் சுற்றி நீண்ட காலமாக வாகன நிறுத்தப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பார்க்கிங் ஏரியா அமைக்குமாறு கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சார்மினார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த வசதியான பார்க்கிங் ஏரியாவை அமைக்க தெலுங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் DBFOT கட்டமைப்பில் பொதுத் தனியார் கூட்டாண்மை (PPP) மூலம் இந்தத் திட்டம் நிறுவப்படவுள்ளது.
அடுத்தடுத்து சக்ஸஸ் – எங்கே அந்த சூரியன்.. பட்டைய கிளப்பி பாயும் ஆதித்யா எல்1 விண்கலம்!
இதற்கான டெண்டர் வரும் செப்டம்பர் 16-ம் தேதி தொடங்க உள்ளதாக குலி குதுப் ஷா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மல்டி-லெவல் பார்க்கிங் (MLP) வளாகம் தோராயமாக 3493 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதில் மூன்று பேஸ்மெண்ட்கள் மற்றும் தரைக்கு மேல் மூன்று தளங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் இந்த பார்க்கிங் வளாகத்தில் சுமார் 145 முதல் 150 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கு சமமான எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அடித்தளம் மற்றும் தரை தளங்களில் வியாபாரிகளுக்கு வணிக இடங்கள் ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக.. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. கொதிக்கும் வைகோ!
இந்த பார்க்கிங் திட்டம் ஹைதரபாத் நகரின் இரண்டாவது மல்டி-லெவல் பார்க்கிங் திட்டமாகும். ஏற்கனவே நம்பப்பள்ளியில் ஒரு மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கு அப்பகுதியில் உள்ள மக்களும் வியாபாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளமான சார்மினார் அருகே நீண்ட காலமாக இருந்து வரும் பார்க்கிங் பிரச்சனைகள் இந்த மல்டிலெவல் பார்க்கிங் மூலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.