2 கோடிக்கு வாட்ச் கட்டும் சிரஞ்சீவி
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு விதவிதமான வாட்ச்களை சேகரிப்பது பொழுதுபோக்கு. இதற்காக அவரது வீட்டில் தனி அறை ஒதுக்கி காட்சியாக வைத்திருக்கிறார். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அதைக் காட்டி அதுபற்றி விபரங்களை கூறுவதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
இந்த நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் ராக்கி பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச், ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தது. உடனடியாக அதன் விலையை தெரிந்து கொள்வதற்காக வலைத்தளத்தில் தேடினர்.
அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி என தெரியவந்தது. இந்த விலை இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 2 கோடியில் கைக்கடிகாரமா? என்று சிலர் விமர்சித்தாலும், இன்னும் சிலர் சிரஞ்சீவி ஆர்வத்தை பாராட்டி உள்ளனர்.