PSAV Global மற்றும் ஹானர் நிறுவனம் ஒன்றிணைந்து மீண்டும் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக வெளியாக இருக்கும் Honor 90 5G மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தகவலையும் உறுதி செய்துள்ளது. Amzon தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறி Honor 90 5G மொபைலை விளம்பரப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். அதில் மேலும் சிறப்பம்சங்கள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளது. Honor 90 5G மொபைலில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியாகியுள்ள அதன் டிசைன் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Honor 90 சீரிஸ்ஏற்கனவே, Honor 90 மற்றும், 90 Pro, 90 Lite ஆகிய மொபைல்கள் ஏற்கனவே மே மற்றும் ஜூன் மாதங்களில் சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் உலக சந்தைகளில் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த வரிசையில் அடுத்தபடியாக Honor 90 5G வெளியாக உள்ளது. இது செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Honor 90 5GHonor 90 5Gல் 3840Hz PWM டிம்மிங் சப்போர்ட் கொண்ட quad-curved டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிஸ்பிளே TUV Rhineland மற்றும் DxoMark சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் ஹானர் வெளியிட்ட தகவலின்படி, MagicOS 7.1 based on Android 13 out-of-the-box இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மொபைலில் இடம்பெறப்போகும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்பெக்ஸ் என்ன என்று பார்க்கலாம்.
Honor 90 5G -ன் ப்ராசஸர் மற்றும் டிஸ்பிளேHonor 90 5G மொபைலில் Snapdragon 7 Gen 1 ப்ராசஸர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6.7இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Honor 90 5G-ன் சார்ஜிங் மற்றும் கேமராHonor 90 5G – ல் OIS வசதியோடு கூடிய 200 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 12 + 2 மெகாபிக்ஸல் கேமரா லென்சஸ் மற்றும் 50 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா ஆகியவை இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 5000 mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W சார்ஜிங் வசதி இடம்பெறும் என்றும் டிப்ஸ்டர்கள் தகவல்களை கசிய விட்டுள்ளனர்.