ஐதராபாத்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
