Tata Nexon Variants – புதிய டாடா நெக்ஸான் வேரியண்ட் வாரியான வசதிகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ (S), ப்யூர்+, ப்யூர்+ (S), க்ரீயேட்டிவ், க்ரீயேட்டிவ்+, க்ரீயேட்டிவ்+ (S), ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் (S) மற்றும் ஃபியர்லெஸ்+ (S) ஆகிய வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.

+ என்பது கூடுதல் வசதிகள் கொண்ட மாடலாகவும், (S) என குறிப்பிட்டிருந்தால் சன்ரூஃப் பெற்றிருக்கும்.

120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.

அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.

nexon dashboard

Tata Nexon Smart

6 ஏர்பேக்குகள்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்

ரைடிங் மோடு- Eco, City & Sports

ஒளிரும் வகையிலான லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங்

ISOFIX

முன்பக்க பவர் விண்டோஸ்

ரிவர்ஸ் சென்சார்

சென்டரல் லாக்கிங்

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (பெட்ரோல் மட்டும்)

Tata Nexon Smart+

ஸ்மார்ட் வசதிகளுடன் கூடுதலாக,

  • 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 4 ஸ்பீக்கர்
  • சுறா துடுப்பு ஆண்டெனா
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே
  • ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல்
  • அனைத்தும் பவர் விண்டோஸ்
  • எலக்ட்ரிக் ORVM

சன்ரூஃப் ஆனது ஸ்மார்ட்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சன்ரூஃப் வசதி Smart+ (S) வேரியண்டில் உள்ளது.

nexon suv

Tata Nexon Pure

ஸ்மார்ட்+ வசதிகளுடன் கூடுதலாக,

  • எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்கு
  • வீல் கவர்
  • கூரை தண்டவாளங்கள்
  • பின்புற ஏசி வென்ட்கள்
  • தொடுதிரை அடிப்படையிலான HVAC கட்டுப்பாடுகள்
  • ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்கள்
  • 4-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • 6-வேக MT/AMT (பெட்ரோல் மட்டும்)

சன்ரூஃப் ஆனது ப்யூர் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சன்ரூஃப் வசதி Pure (S) வேரியண்டில் உள்ளது.

new tata nexon

Tata Nexon Creative

ப்யூர் வசதிகளுடன் கூடுதலாக

  • எல்இடி ரன்னிங் விளக்கு மற்றும் எல்இடி டெயில் விளக்கு
  • 16-இன்ச் அலாய் வீல்
  • ஹார்மன் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 4 ஸ்பீக்கர் + 2 ட்வீட்டர்
  • 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • ஆட்டோமேட்டிக் HVAC கட்டுப்பாடுகள்
  • ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தானை
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
  •  பின்புற வைப்பர் மற்றும் வாஷர்
  • குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ்
  • ரிவர்ஸ் கேமரா
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)
  • ஏன்டி கிளேர் IRVM
  • மோனோஸ்டபிள் ஷிஃப்டர் (AMT/DCT மட்டும்)
  • பேடில் ஷிஃப்டர்கள் (AMT/DCT மட்டும்)
  • 6 வேக  MT/AMT கியர்பாக்ஸ் (பெட்ரோல் மற்றும் டீசல்)
  • 7-வேக DCT கியர்பாக்ஸ் (பெட்ரோல் மட்டும்)

Tata Nexon Creative+

க்ரீயோட்டிவ் வசதிகளுடன் கூடுதலாக,

  • 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 360 சரவுண்ட் வியூ கேமரா சிஸ்டம்
  • முன்புற பார்க்கிங் சென்சார்
  • பிளைன்ட் வியூ மானிட்டர்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
  • ஆட்டோமேட்டிக் iRVM
  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • ஆட்டோ ஹெட்லேம்ப்
  • மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்

சன்ரூஃப் வசதி ஆனது க்ரீயோட்டிவ்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக குரல் உதவியுடன் இயக்கும் சன்ரூஃப் வசதி Creative+ (S) வேரியண்டில் உள்ளது.

tata nexon led tail light

Tata Nexon Fearless

க்ரீயோட்டிவ்+ வசதிகளுடன் கூடுதலாக,

  • வரவேற்பு/குட்பை ஒளிரும் வசதி எல்இடி ரன்னிங் விளக்கு மற்றும் டெயில் விளக்கு
  • நேவிகேஷன் டிஸ்ப்ளே வசதியுடன் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • 4 ட்வீட்டர்கள் + 4 ஸ்பீக்கர்கள்
  • தூசி சென்சாருடன் கூடிய காற்று சுத்திகரிப்பு
  • வயர்லெஸ் சார்ஜர்
  • பின்புற டிஃபோகர்
  • கார்னரிங் ஒளிரும் விளக்குடன் மூடுபனி விளக்குகள்
  • ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய கிராண்ட் ஃப்ளோர் கன்சோல்
  • 60:40 இருக்கை

சன்ரூஃப் வசதி ஆனது ஃபியர்லெஸ்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக குரல் உதவியுடன் இயக்கும் சன்ரூஃப் வசதி Fearless (S) வேரியண்டில் உள்ளது.

2023 tata nexon suv rear

Tata Nexon Fearless+ (S)

  • காற்றோட்டமான லெதரெட் முன் இருக்கைகள்
  • இணை ஓட்டுநர் இருக்கையின் உயரம் அட்ஜெஸ்ட் செய்யலாம்
  • சப் வூஃபர் (AMT/DCTக்கு மட்டும்)
  • JBL-பிராண்டட் ஸ்பீக்கர் சிஸ்டம் (AMT/DCTக்கு மட்டும்)
  • லெதரெட் ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய கிராண்ட் ஃப்ளோர் கன்சோல்
  • ஹார்மன் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • iRA 2.0 கனெக்ட்டிவ் அம்சங்கள்
  • அவசர அழைப்பு & பிரேக் டவுன் அழைப்பு வசதி
  • ரிமோட் மூலம் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்
  • ரிமோட் வாகனக் கட்டுப்பாடு அம்சங்கள்

tata nexon suv front view

புதிய டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் எஸ்யூவி விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சத்தில் அமையக்கூடும். வரும் செப்டம்பர் 4, 2023 முன்பதிவு துவங்கப்படும் நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

நெக்ஸானுக்கு போட்டியாக மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி ஃப்ரான்க்ஸ், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கிகர்,மற்றும் நிசான் மேக்னைட் போன்றவ்வை உள்ளன.

மேலும் வருகின்ற 9 ஆம் தேதி டாடா நெக்ஸான்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்ப்பட்ட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.