லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. முற்றிலும் வித்யாசமான கூட்டணியில் இப்படம் உருவாவதால் ரசிகர்கள் இப்படத்தை காண தற்போதே ஆவலாக இருக்கின்றனர்.
வெங்கட் பிரபு – யுவன் ஷங்கர் ராஜா – விஜய் என வித்யாசமான கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.
தளபதி 68 அப்டேட்
இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. விஜய் உட்பட இப்படத்தில் ஜெய், சிம்பு, ப்ரியங்கா மோகன் என பலர் நடிப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
vijay about rajini: தலைவருக்கு தில்லு அதிகம்..ரஜினியின் தைரியத்தை பார்த்து மெர்சலான விஜய்…ஒரு குட்டி பிளாஷ்பாக்..!
ஆனாலும் வழக்கம் போல இந்த தகவல்கள் உண்மையா இல்லை வதந்தியா என தெரியவில்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்தன. மேலும் இத்தகவல் கிட்டத்தட்ட உறுதியாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என கூறப்படுகின்றது. அதற்கு காரணம் அவரின் கதாபாத்திரம் தானாம்.
என்னவென்றால் தளபதி 68 படத்தில் விஜய் அப்பா மற்றும் பையன் என இரு வேடங்களில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாகத்தான் ஜோதிகா நடிக்கின்றார். எனவே பிள்ளை விஜய்க்கு ஜோதிகா அம்மாவாக நடிக்கின்றார். இதையடுத்து பிள்ளை விஜய் ஜோதிகாவை அம்மா என கூப்பிட்டால் அது சரியாக இருக்காது என ஜோதிகா கருதுகிறாராம். விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்து வெற்றி பெற்ற ஜோதிகா தற்போது விஜய்க்கு அம்மாவாக நடித்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதன் காரணமாகவே இப்படத்தில் இருந்து ஜோதிகா விலகியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜோதிகாவிற்கு பதிலாக தளபதி 68 திரைப்படத்தில் சிம்ரன் நடிக்கின்றார் என தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது சிம்ரனும் இல்லை என்றும், அதற்கு பதிலாக சினேகா தான் அந்த ரோலில் நடிக்கின்றார் என்றும் தகவல் வந்துள்ளது. இதில் எது உண்மை, எது வதந்தி என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.