இசையமைப்பாளர் தேவா வில்லனா? தனுஷின் பலே ஐடியா
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வடசென்னை அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் தேவா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “தனுஷ் இயக்கும் புதிய படத்தில் என்னை வில்லனாக நடிக்க அழைத்தார். எப்படி என்னை நம்பி நடிக்க கூப்புடுறீங்க என கேட்டேன். அதற்கு தனுஷ் உங்க அளவுக்கு யாரும் வடசென்னை பாஷை பேச முடியாது என்று கூறினார். ஆனால், நான் பாடல்கள் பாடும் போதே நோட்ஸ் இல்லாமல் பாட முடியாது. என்னால் நீங்கள் சொல்லும் வசனங்களை ஞாபகம் வச்சி பேச முடியாது. என்னால் மத்தவங்களுக்கு சிரமமா இருக்கும்னு என வேணாம்னு சொல்லிட்டேன்” என தெரிவித்துள்ளார்.