இன்ஸ்டாவில் நயன்தாரா சாதனை
இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். படங்களில் நடிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், அதனை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வந்தார். அவருக்கு பதிலாக அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமின் முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை வெளிஉலகத்திற்கு பகிர்ந்திருந்தர். இது வைரலானது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் சாதனைப் படைத்துள்ளார். கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடரத் தொடங்கியுள்ளனர். இவ்வளவு விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகை நயன்தாராதான். இதற்கு முன், நடிகை கேத்ரினா கைபுக்கு 10 லட்சம் பாலோயர்கள் 24 மணி நேரத்தில் கிடைத்தது சாதனை அளவாக இருந்தது.