கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி வரலாறு காணாத விபத்து ஏற்பட்டது. இதில், சென்னையிலிருந்து ஹவுரா சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது, தவறான சிக்னல் வழங்கப்பட்டதால் பிரதான பாதைக்குப் பதிலாக இணைப்பு பாதை வழியாகச் சென்றது. இது இணைப்பு பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது மோதியது .
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக மோதியதால் அதன் 21 பெட்டிகள் தடம் புரண்டன . அதில் மூன்று பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு பாதையில் விழுந்தன. இந்த மூன்று பெட்டிகள்மீது எதிரே வந்த பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதுதான் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி, ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார் மஹந்தா, முகமது அமீர் கான், தொழில்நுட்ப வல்லுநர் பப்புகுமார் ஆகியோரை சி.பி.ஐ கைதுசெய்தது. இவர்கள்மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில் கைது செய்த இரண்டு மாதங்கள் கழித்து, நேற்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY