கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். தன் இரட்டை மகன்கள் உயிர், உலகுடன் ஸ்டைலாக நடந்து வந்த வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என போஸ்ட் போட்டார்.
மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா: விக்னேஷ் சிவனிம் மன்னிப்பு கேட்கும் ரசிகாஸ்
நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்ததில் ஒரு சந்தோஷம் என்றால், உயிர், உலகின் முகத்தை முதல் முறையாக பார்த்ததில் தனி சந்தோஷம் என அன்றைய தினம் ரசிகர்கள் ஒரே குஷியில் இருந்தார்கள். மேலும் நயன்தாராவை பின்தொடர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை பார்க்க அவ்வப்போது அவரின் இன்ஸ்டா பக்கம் சென்று வந்தார்கள்.
தனி ஒருவன் 2 வில்லன் இவரா?
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்த 24 மணிநேரத்திற்குள் அவருக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டார்கள். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற இந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ளார் நயன்தாரா.
முன்னதாக அந்த பெருமைக்கு சொந்தக்காரர் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். இன்ஸ்டாகிராமுக்கு வந்த 24 மணிநேரம் கழித்து கத்ரீனாவுக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.
நயன்தாராவுக்கு தற்போதுவரை 2.2 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமுக்கு வந்த வேகத்தில் தான் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்திருக்கும் ஜவான் வீடியோக்களை போஸ்ட் செய்தார்.
ஜவான் படத்தை விளம்பரம் செய்யத் தான் நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கியிருக்கும் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
ஷாருக்கானின் மனைவியான கௌரி தயாரித்திருக்கும் ஜவான் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 11 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.
ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜவான் படம் மூலம் அட்லி, நயன்தாரா மட்டும் அல்ல அனிருத்தும் பாலிவுட் சென்றிருக்கிறார்.
ஜவான் இசை நிகழ்ச்சியில் அனிருத்தை பார்த்த ஷாருக்கான் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது,
காதலித்த பெண்ணை வித்தியாசமாக பழி வாங்கிய விஜய் சேதுபதி: எப்படினு பாருங்க மக்களே
நான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணுக்கோ ஷாருக்கான் மீது காதல். தற்போது ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் அந்த பெண்ணை பழிவாங்கிவிட்டேன் என தெரிவித்தார்.
பள்ளியில் காதலித்த பெண்ணை இத்தனை ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய ஹீரோவை இப்போ தான் பார்க்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜவான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்த படத்தில் யோகி பாபுவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.