முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பிறந்த கருணாநிதி அரசியல் தலைவராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சீர்திருத்தவாதியாக, இலக்கியவாதியாக, திரைக்கதை ஆசிரியராக, நவீன தமிழகத்தின் ஆசானாக என பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்தார்.
கலைஞர் வழியில் ஸ்டாலின் – மக்கள் களத்தில் கனிமொழி
கலைஞர் நூற்றாண்டு விழா
தமிழகத்தை நீண்ட காலம் (18 ஆண்டுகள் 362 நாட்கள்) ஆண்ட முதலமைச்சர் என்ற சாதனையை படைத்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தாலும் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் வந்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
இதை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள், அறிவிப்புகள், கூட்டங்கள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் “கலைஞர் 100 வினாடி வினா” என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கலைஞர் 100 வினாடி வினா
இதற்கான ஏற்பாடுகளை திமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி செய்துள்ளார். கழக மகளிரணி சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான
kalaignar100.co.in
என்ற பிரத்யேகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
X தளத்தில் பதிவு
வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மேற்குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது X தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பாராட்டு
அதில், கனிமொழி முன்னெடுக்கும் வினாடி வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. இதற்காக தற்போது முதலே தயாராகுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதை ரீபோஸ்ட் செய்துள்ள கனிமொழி, அறிவியக்கமாக வாழ்ந்து வழிகாட்டியவர் தலைவர் கலைஞர்.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வரும் செப்டம்பர் 15 முதல்
அவரது நூற்றாண்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்று சிறப்புகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுத்து செல்லும் முயற்சியாக வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வை தொடங்கி வைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.