கோவா,
கோவாவில் உள்ள பனாஜியிலிருந்து மபுசா நோக்கி சென்றுகொண்டிருந்த கார், போர்விரின் பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மரத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 1 பெண் மற்றும் 2 ஆண்கள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடவே விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் கார் அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது