ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 49. ஹீத் ஸ்ட்ரீக் மரணத்தை அவரது மனைவி நாடினே ஸ்ட்ரீக் உறுதி செய்துள்ளார்.
1990 முதல் 2000ம் ஆண்டு வரை அந்நாட்டு அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கிய ஹீத் ஸ்ட்ரீக், ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4933 ரன்களை எடுத்ததுடன், 455 விக்கெட்களை வீழ்த்தினார். 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற உடன், இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் கோல்கட்டா அணி, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கும் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டனர். ஆனால், ஜிம்பாப்வே அணி முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலாங்கா மறுத்து அறிக்கை வெளியிட்டாார். இதனையடுத்து பிரபலங்கள் அந்த பதிவுகளை நீக்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement