புதுடெல்லி: ‘என் மண் என் தேசம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமிர்த கலச யாத்திரை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அப்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்.
அந்த லட்சிய பயணத்தில் நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தேசபக்தர். பிரதமர் மோடியின் அமிர்த பெரு விழா மூலம் நாட்டு மக்களிடையே தேசபக்தி உணர்வு மீண்டும் எழுச்சி பெற்றிருக்கிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.