வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து, இந்திய ரயில்வே வேற லெவலுக்கு சென்றுவிட்டதாய் பேசி வருகின்றனர். இதற்கு ஊடக வெளிச்சமும், ஒவ்வொரு ரயிலுக்கும் பிரதமர் மோடி நேரடியாக களமிறங்குதும் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது வரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்அதில் பெரிதும் வரவேற்பை பெற்றது கேரளா மாநிலத்தில் அறிமுகம் செய்த காசர்கோடு டூ திருவனந்தபுரம் ரயில் தான். முன்பதிவில் சக்கை போடு போடுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் காசர்கோடு டூ திருவனந்தபுரம் ரூட்டில் 100 இருக்கைகளுக்கு 183 பேரும், திருவனந்தபுரம் டூ காசர்கோடு ரூட்டில் 100 இருக்கைகளுக்கு 173 பேரும் புக்கிங் செய்து பயணிக்க ஆர்வம் காட்டுவதாக விகிதாச்சார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலைஇந்நிலையில் கேரள மாநிலத்தின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ரயில் சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு சென்னையில் இருந்து மங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு கோட்ட பொறியாளர்கள்கேரளாவின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு கோட்ட ரயில்வே பொறியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இனிமேல் இவர்கள் தான் ரயிலை பராமரித்து உரிய முறையில் இயக்கவுள்ளனர். நேற்றைய தினம் இந்த ரயில் மங்களூருவை சென்றடைந்தது. இந்த ரயிலுக்கான வழித்தடம் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
எந்த வழித்தடத்தில்தற்போது எந்தெந்த வழித்தடங்கள் பரிந்துரை பட்டியலில் இருக்கின்றன என்று விசாரித்தால், மங்களூரு டூ திருவனந்தபுரம், மங்களூரு டூ எர்ணாகுளம், மங்களூரு டூ கோவை, மத்கோவன் (கோவா) டூ எர்ணாகுளம் எனக் கூறுகின்றனர். இதில் எந்த வழித்தடம் என்பது தெற்கு ரயில்வேயின் அதிகாரிகள் குழு தான் இறுதி முடிவு எடுக்கும். உரிய தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
சென்னைக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கேரளாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரவுள்ளன. அவை, சென்னை சென்ட்ரல் டூ விஜயவாடா, சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி ரயில்கள். இதில் தமிழகத்திற்கு உள்ளேயே இயக்கப்படும் சென்னை டூ திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
தென் மாவட்ட மக்கள் ஹேப்பிஏனெனில் மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போதே ஒலிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அடுத்தகட்ட ஏற்பாட்டில் சென்னை எழும்பூர் டூ கன்னியாகுமரி ரூட்டில் தனியாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.