லூனா 25
ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான் விண்கலம் அனுப்பட்டு சுமார் 15 நாட்களுக்கு பிறகே லூனா 25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ரஷ்யா முடிவு
இருப்பினும் சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் லூனா 25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா முடிவு செய்திருந்தத. அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதியே லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் இறக்க முடிவு செய்திருந்தது.
‘வெடிச்சு சிதறிடுவேன்’ விஜயலட்சுமி விவகாரத்தால் ஆவேசம்… வீடியோ வெளியிட்டு வெகுண்ட சீமான்!
நிலவில் மோதியது
இதனால் அதிவேகமாக செலுத்தப்பட்ட லூனா 25 நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லூனா 25 விண்கலம் வேகமாக நிலவில் மோதி சேதமடைந்தது. இதையடுத்து லூனா 25 திட்டம் தோல்வி என அறிவித்தது ரஷ்யா.
தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரஷ்ய விண்வெளி மையத்தைப் பார்வையிட செல்லும் மாணவிகளுக்கு நிதி உதவி
நிலவில் பள்ளம்
இந்நிலையில் லூனா 25 விண்கலம் விழுந்த இடத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. அதில் லூனா 25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஆதித்யாவுடன் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி… பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!
10 மீட்டர் பள்ளம்
இந்த பள்ளம் லூனா 25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது. மேலும் நிலவின் அந்த பகுதியில் 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் நாசா ஒப்பீடு செய்து வெளியிட்டுள்ளது.