லக்னோ-பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், உ.பி., தலைநகர் லக்னோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில், அவரது மகன் விகாஸ் கிஷோரின் நண்பர் வினய் ஸ்ரீவஸ்தவா என்பவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், அஜய் ராவத், அன்கித் வர்மா, ஷமிம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த போது, கவுசல் கிஷோரின் மகன் விகாஸ் கிஷோர், புதுடில்லியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், அமைச்சரின் வீட்டில் அஜய் ராவத், அன்கித் வர்மா, ஷமிம், வினய் ஆகியோர் மது அருந்தியதும், பின் ஏற்பட்ட வாக்குவாதத்தில், விகாசுக்கு சொந்தமான துப்பாக்கியால், வினயை மற்றவர்கள் சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில், விகாஸ் கிஷோர் மீது, ஆயுதச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement